இந்தக் கூட்டத்தில், கர்நாடகம் தமிழகத்திற்கு காவிரியில் மாதந்தோறும் தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டும் காவிரியில் தண்ணீர் திறந்துவிடவில்லை. இதனால், குறுவை, சம்பா நெல் சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். எனவே, கர்நாடக அரசு மீதும், உச்சநீதிமன்ற உத்தரவை கண்டுகொள்ளாத மத்திய அரசு மீதும் ஒரு லட்சம் கோடி நஷ்ட ஈடு கேட்டு தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் நஷ்ட ஈடாக கொடுக்க வேண்டும்.
எந்த காரணத்தைக் கொண்டும் மேகதாது அணையை கர்நாடக அரசு கட்ட விடக்கூடாது.
காவிரி கொள்ளிடத்தில் 10 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும். கோதாவரி - காவிரி நதிகளை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உதவிட வேண்டும். விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டும். தென் மாவட்டங்களில் வனவிலங்குகளிடமிருந்து உயிரையும், பயிரையும் காப்பாற்ற வேலி அமைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.